ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய டிட்வா புயல், சென்னைக்கு 50 கி.மீ. தொலைவிலேயே நிலைகொண்டுள்ளது. சென்னைக்கு அருகே நகராமல் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர். ஏற்கெனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
