என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

By Visaka on ஆனி 27, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அனிதா என்ற இளம்பெண்ணுக்கும், வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் 29 வயதான சுரேஷ் என்பவருக்கும் கடந்த மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய கணவருடன் இணைந்து அனிதா கழுகுமலையில் உள்ள புகழ்பெற்ற கழுகாசலமூர்த்தி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

முக்கியக் கோவிலில் வழிபாட்டை முடித்த தம்பதியினர், அங்கிருந்து மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அங்கிருந்த குரங்குகளுக்குப் பழங்களை உணவாகக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏராளமான குரங்குகள் அவர்களைச் சுற்றிலும் திரண்டுள்ளன. இதனால் அனிதா கடும் அச்சமும் பதற்றமும் அடைந்துள்ளார்.

   

இந்த எதிர்பாராத கூட்டத்தாலும் பயத்தாலும் நிலைதடுமாறிய அனிதா, மலை உச்சியிலிருந்து திடீரென கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே தனது கணவரின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கழுகுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் காவல்துறையினரும் அனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.