“அவர் செத்தது கொலையே இல்ல!”… ஒரே நாளில் தலைகீழாக மாறிய காட்சி… மாடல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…மரணத்தின் பின்னணியில் நடந்தது என்ன?…!!

By Gayathri on ஐப்பசி 15, 2026

Spread the love

உணவக உரிமையாளர் ஷிவா ஷர்மாவின் மர்ம மரண வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட மாடலும் பிரபல சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்ரத்தா துபே, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், தனக்கும் இந்தச் சம்பவத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தன் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் தன் மீது பழி சுமத்தப்படுவதாகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், காவல் துறையின் சட்டபூர்வ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அதில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே காணொளியில், ஷர்மாவின் மரணம் திட்டமிட்ட கொலையல்ல என்றும், அது அவர் சுயமாக எடுத்த விபரீத தற்கொலை முடிவு என்றும் ஸ்ரத்தா பகிரங்கமாக வாதிட்டுள்ளார். உணர்ச்சிவசப்பட்டு தன் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு தான் பலமுறை அறிவுறுத்தியும் அவர் கேட்கவில்லை எனத் தெரிவித்த அவர், உண்மை வெளிவரும் வரை பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தன்னை குற்றவாளியாகச் சித்தரித்து அவதூறு பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.