தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மலக்பேட்டைக்கு உட்பட்ட அக்பர் பாக் பகுதியில், பட்டப்பகலில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஸ்டெப்னி டயர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி சாலையில் நின்றுகொண்டிருந்த காரின் பின்புறப் பகுதியில் வெளிப்புறமாகப் பொருத்தப்பட்டிருந்த தார் டயரை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துணிகரமாகக் கழற்றி தனது ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார்.
இந்தச் திருட்டுச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர் சுற்றிலும் கேமரா இருப்பதை கவனிக்காமல் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இந்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதோடு, மக்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரங்களிலேயே இதுபோன்ற துணிச்சலான திருட்டுகள் நடப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.instagram.com/reel/DfCWF5ANvGi/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர் சாதிர்நாட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி பதிவுகளில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் தொடரும் இது போன்ற வாகனப் பாகங்கள் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களும் வாகன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
