ஐயோ கொடுமையே… நூடுல்ஸ் கடையில் தொடங்கிய கள்ளக்காதல்… கணவனை கொன்று கதையை முடித்த கொடூர மனைவி… தென்காசியில் நடந்த பயங்கரம்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்தவித் ரஹ்மத் கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அங்கு சென்ற வாடகை கார் குறித்த துப்பு கிடைத்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அந்த வாடகை காரை விசாரித்ததில், அங்குள்ள ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்யும் மகேஷ் குமார் என்பவர்தான் காரை அழைத்துச் சென்றது தெரியவந்தது. அந்த ஹோட்டலுக்கு நூடுல்ஸ் வாங்கச் சென்ற ரஹ்மத்தின் மனைவி கம்சா என்ற நிஷாவுக்கும் மகேஷ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

   

இருவரும் சேர்ந்து வாழத் தடையாக இருந்த கணவர் ரஹ்மத்தை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதற்காக ஷட்டர் வேலை இருப்பதாகக் கூறி ரஹ்மட்டை வாடகை காரில் தென்காசிக்கு அழைத்துச் சென்ற மகேஷ் குமார், அங்கு வைத்து கிரைண்டர் கல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் கள்ளக்காதலன் மகேஷ் குமார் மற்றும் மனைவி நிஷா ஆகிய இருவரையும் இலத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.