நர்சுடன் லிவ்-இன் உறவு…! “10 மாத குழந்தையுடன் மனைவி..” காதலியை முதலைகள் நிறைந்த ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற கொடூரன்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியைச் சேர்ந்த சத்யபிரகாஷ் ஜாதவ் என்ற திருமணமான நபர், தன்னுடன் லிவ்-இன் உறவில் இருந்த செவிலியர் சினேகலதா பாண்டே என்பவரைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொடூரமாகக் கொன்று முதலைகள் நிறைந்த நதியில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்யபிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில், செவிலியரான சினேகலதாவுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இருந்து வந்துள்ளான். இவர்களுக்கு 10 மாதக் குழந்தை உள்ள நிலையில், சினேகலதா தன்னைத் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த சத்யபிரகாஷ், தனது 10 மாதக் குழந்தையை மனைவியிடம் சேர்த்துவிட்டு, அக்டோபர் 8 அன்று சினேகலதாவை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். 5 நதிகள் சந்திக்கும் ‘பஞ்சநதி’ பகுதியில் உள்ள முதலைகள் நிறைந்த நதியில் சினேகலதாவைத் தள்ளிவிட்டுக் கொன்றதுடன், ர்ஊருக்குத் திரும்பி வந்து அவரே சினேகலதாவை காணவில்லை என நாடகமாடிப் புகாரும் அளித்துள்ளான். காவல்துறையினர் தனது வழக்கமான விசாரணையைத் தொடங்கியதும் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.