தொழில் செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் அதற்கான வயதும் அனுபவமும் நிறைய வேண்டும் என்று தான் ஆலோசனை கூறுவார்கள். ஏனென்றால் ஒரு தொழிலை எடுத்து நிர்வகிக்க அதற்கான பொறுமை சிந்தனை தேவை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வயது ஒரு பொருட்டே இல்லை என்பது போல் இளம் தலைமுறையினர் மிகவும் திறமையாக செயல்படுகிறார்கள். அப்படி 18 வயதிலேயே மிகப்பெரிய பிசினஸை உருவாக்கிய பெங்களூர் சேர்ந்த ஒரு பெண்ணை பற்றி இனி காண்போம்.

பெங்களூரில் ராஜஸ்தானி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மேக்னா. சிறுவயதில் இருந்து இனிப்புகள் மீது அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு அவரது பக்கத்து வீட்டுக்காரர் கோடைகால பேக்கிங் வகுப்பை தொடங்கிய போது பெரியோர்களில் ஒரே குழந்தையாக இவர் சேர்ந்து பேக்கிங் ஆர்வமுடன் கற்றுக் கொண்டார்.
அப்போது கப் கேப் தயாரிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த மேக்னா நண்பர்கள் குடும்பங்கள் ஆதரவுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் கப் கேக்குகளை தயாரித்து திங்கட்கிழமைகளில் தனது கல்லூரி உணவகத்தில் அதனை விற்பனை செய்து வந்தார். கல்லூரி படிக்கும்போது என் ஐ டி திருச்சியில் நடந்த ஒரு வணிகப் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார் மேக்னா. அதற்குப் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்த மேகனா கல்லூரி படிப்பை முடித்த பிறகு பேக்கிங் பிசினஸை தொடங்கலாம் என்று நினைத்திருந்தார்.

கல்லூரி படிப்பை முடித்த பின்பு 15 மாதங்கள் செஃப் என்ற உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். கல்லூரி காலத்தில் பேக்கிங் செய்து மாதம் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் முதல் வருமானம் ஈட்டி வந்த மேக்னாவிற்கு ஒரு தொழில் தொடங்குவதற்கான நிதி தேவைப்படுவதற்கு சிறிது கால அவகாசம் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு தான் எல்லாவற்றையும் பல யோசனைக்கு பிறகு Dream A Dozen என்ற பிரண்டைத் தொடங்கினார். இந்த பிராண்டின் மூலம் இனிப்புகள் கேக்குகள் கொண்ட ஒரு கிப்ட் பாக்ஸை அழகாக தயார் செய்து விற்பனை செய்வதை இந்த பிராண்டின் வணிக நோக்கமாக இருந்தது. வீட்டு சமையலறையிலேயே தனது தொழிலை தொடங்கி செய்து வந்திருந்த மேக்னா 2020க்கு பிறகு தனியாக வணீக இடத்திற்கு மாறினார். கார்ப்பரேட் கம்பெனிகள் இருந்து ஆர்டர்கள் பெறுவதற்கு மிகவும் உழைத்தார் மேக்னா.
இவரது அழகாக வடிவமைக்கப்பட்ட கிப்ட் பாக்ஸ்களில் இனிப்புகள் கப்பு கேக்குகள் மெழுகுவர்த்திகள் விளக்குகள் போன்ற கையால் செய்யப்பட்ட பொருட்களை சுய உதவி குழுக்கள் பெண்களை ஆதரவளித்து அவர்களை பணியமர்த்தி இதன் மூலம் தொழிலை செய்து விற்பனையை தொடங்கினார் மேக்னா.

பெண்களை வைத்து அவர்களுக்கு ஆதரவளித்து முன்னேற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தால் மேகனாவின் Dream A Dozen நிறுவனத்தில் 20கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் 98 சதவீதம் பெண்கள்தான். அவர்கள் யாவரும் முறையாக கல்வியை கூட பெற்றிருக்காதவர்கள். மேக்னாவின் இந்த Dream A Dozen நிறுவனம் தற்போது பி2பி சந்தையில் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறது. கப் கேக்குகள் கேக் பாக்ஸ் சீஸ் கேக்குகள் உட்பட 100க்கும் மேற்பட்ட க்யூ ரேட் கிப்ட் ஹம்பர்களை இது கார்ப்பரேட் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு வழங்கி வருகிறார் மேக்னா.
கார்ப்பரேட் அல்லாத தனிநபர்களுக்கு சேவை செய்வதற்காக டி2சி வகையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் மேக்னா. மாத வருமானமாக ஒன்றரை லட்சம் வருவாய் ஈட்டி வந்த மேகனா 2021 இல் 30 லட்சம் 2022-ல் 60 லட்சம் ஆக உயர்த்திருக்கிறார். தற்போது இந்த வருடத்தில் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார் மேக்னா. எந்த ஒரு தொழிலுக்கு வயது தடை அல்ல என்பதை நிரூபித்து காட்டி தனது இளம் வயதில் 18 வயதில் தொழிலை தொடங்கி தற்போது ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தொழிலதிபராக மாறி மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் மேக்னா.
