அதிர்ச்சி…! மாணவர் விடுதி மெஸ்ஸுக்குள் கூலாக நடந்து வந்த முதலை… அலறி அடித்து ஓடிய மாணவர்கள்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!!

By Swetha on ஆடி 20, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள கோரல் பார்க் பகுதியில் இயங்கி வரும் மாணவர்கள் விடுதியில், திடீரென ஒரு முதலை நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிய வேளையில், விடுதியின் அடித்தளத்தில் உள்ள உணவகப் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள் வழியாக முதலை இறங்கிச் செல்லும் அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சமையலறை ஊழியர்களும் மாணவர்களும் முதலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

விடுதியில் முதலை புகுந்த செய்தி வேகமாகப் பரவியதை அடுத்து, மாணவர்கள் அனைவரும் அச்சத்துடன் கட்டிடத்திற்கு வெளியே திரண்டனர். வனத்துறை மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பாக, சில மாணவர்கள் முதலையைப் பிடிக்க முயன்றதால் அது மிரட்சியடைந்து உணவகப் பகுதிக்குள் அங்கும் இங்குமாக நகரத் தொடங்கியது. பருவமழைக் காலத்தில் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரும்போது, அருகிலுள்ள சாக்கடைக் கால்வாய்கள் வழியாக முதலைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவது உண்டு. அதேபோலவே விடுதிக்கு அருகில் உள்ள பெரிய வடிகால் வழியே இந்த முதலையும் தவறாக உள்ளே நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

   

விடுதி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் உடனடியாக மீட்புக் குழுவை அனுப்பி முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் மாணவர்களுக்கோ அல்லது முதலையக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட முதலை அதன் இயற்கை வாழ்விடமான சம்பல் நதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி வீரேந்திர சிங் தெரிவித்தார். முதலை அகறற்றப்பட்டதைத் தொடர்ந்து விடுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.