பெரும் சர்ச்சை.! பாலஸ்தீனக் கொடி கொண்ட ஹெல்மெட் அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்… லீக் போட்டிகளில் விளையாட தடை…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது, வீரர் ஒருவர் பாலஸ்தீனக் கொடி பதிக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்து விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஃபுர்கான் பட் என அடையாளம் காணப்பட்ட அந்த வீரர், மைதானத்தில் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து, விளையாட்டு மைதானத்தில் அரசியல் ரீதியான அடையாளங்களைப் பயன்படுத்தியதற்காக அவர் லீக் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஃபுர்கான் பட்டை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீரரின் நோக்கம் என்ன என்பது குறித்தும், இந்தச் செயலுக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த விசாரணை குறித்து காவல்துறையினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.