மக்களே உஷார்…! சக ஊழியர் சொன்ன ஐடியா… ரூ.62 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் ராஜேஷ் வேலை பார்த்து வருகிறார். அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் விக்னேஷ் என்பவர் ஷேர் மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து அதிக லாபம் பெற்று வருவதாக ராஜேஷிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ராஜேஷுக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ஆசை வந்தது. அதன்படி கடந்த ஆண்டு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் செயலிகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 62 லட்ச ரூபாய் பணத்தை ராஜேஷ் அபிராமி தம்பதியினர் கடனாக வாங்கியுள்ளனர். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட விக்னேஷும் அவரது மனைவியும் ஒரு சில மாதங்கள் மட்டும் முதலீடு லாபத்தொகை என கூறி 3 லட்ச ரூபாய் பணத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளனர்.

   

அதன் பிறகு பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது விக்னேஷ் சரியாக பதில் அளிக்காததால் ராஜேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.