“நீயும், நானும் அன்பே…” வெளியே பற்றி எரிந்த கலவரம்… உள்ளே ரிலாக்ஸாக ஜூஸ் குடித்த ஜோடி… இணையத்தை அதிர வைக்கும் வைரல் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு எதிராக வெடித்துள்ள தீவிரப் போராட்டங்களுக்கு நடுவே, பாரிஸ் நகரில் கபே ஒன்றின் வெளியே ஜோடி ஒன்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிகவும் அமைதியாக ஜூஸ் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாரிஸின் புகழ்பெற்ற ஆர்ச் டி ட்ரையம்ப் அருகே கடந்த சனிக்கிழமையன்று வன்முறைப் போராட்டங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறி வந்தன.

அப்பகுதியில் குப்பைக் கூடையினர் தீப்பற்றி எரிய, அதற்குக் மிக அருகில் உள்ள கபே மேடையில் அமர்ந்திருந்த ஆணும் பெண்ணும் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இயல்பாகப் பேசிட்டுக் கொண்டு காபி குடிக்கும் காட்சி உலகளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கலவரத்தின் நடுவே மனிதர்களின் மன உறுதியையும் அமைதியையும் காட்டும் ஒரு குறியீடாக நெட்டிசன்கள் இச்சம்பவத்தைப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.