“அவன் ஒரு போலியான ஆள்..!” நடிகர் சூரியின் முகத்திரையைக் கிழித்த உயிர் நண்பன்… பின்னணியில் இவ்வளவு துரோகமா?… உச்சக்கட்ட அதிர்ச்சியில் கோலிவுட்…!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சூரி தனக்குத் திரைத்துறையில் தொடக்க காலத்தில் உதவிய நண்பர்களைப் பேட்டிகளில் பெருமையாகப் பேசி, போலியான ‘சிம்பதி’ (Sympathy) கிரியேட் செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆரம்பகால நண்பரும் இயக்குநருமான வெற்றிவீரன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மிகக் கோபமாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 16 முதல் 20 நண்பர்கள் சூரியின் வளர்ச்சிக்குக் கூடவே இருந்து உதவி செய்ததாகவும், ஆனால் இன்று பெரிய இடத்திற்குச் சென்ற பிறகு அவர்களில் ஒருவருக்குக் கூட சூரி எந்தவொரு சினிமா வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சூரி பல்வேறு ஊடகப் பேட்டிகளில் “வெற்றிவீரன் தான் என்னைக் கூட்டிட்டு வந்தான், ரூம்ல சோறு வாங்கித் தந்தான், வேட்டியைக் கழட்டிக் கொடுத்தான்” என்று உருக்கமாகப் பேசுவது வெறும் விளம்பரத்திற்காகவும், தன்னை இன்னும் பழைய விஷயங்களை மறக்காத உத்தமனாகக் காட்டிக் கொள்வதற்காகவுமே தவிர, நிஜத்தில் அவர் யாருக்கும் கை கொடுக்கவில்லை என்று வெற்றிவீரன் கூறியுள்ளார். தான் இயக்கும் புதிய படத்திற்கு ஒரு சிறிய ‘ஃபர்ஸ்ட் லுக்’ அல்லது வாய்ஸ் மெசேஜ் மூலம் புரொமோஷன் செய்து தருமாறு தனிப்பட்ட முறையில் கேட்டும், பல்வேறு காரணங்களைக் கூறி சூரி அதைச் செய்ய மறுத்துவிட்டதாகவும், ஒருகட்டத்தில் தனது போன் நம்பரைக் கூட பிளாக் செய்துவிட்டதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

   

முன்பு நடிகர் சூர்யாவை வைத்துத் தான் ஒரு பெரிய படம் பண்ணவிருந்த போது, அந்தத் தயாரிப்பு நிறுவனமே எதிர்த்த பிறகும் கூட, சூரியை ‘கருவாயன்’ என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப் புகைப்படத் தொகுப்பு (Photo Shoot) வரை எடுத்து வாய்ப்பளித்ததாக வெற்றிவீரன் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், சூரி தனது பேட்டிகளில் “சென்னையில் எந்த அடுக்குமாடி உசந்த கட்டிடத்தைப் பார்த்தாலும் நான் பெயிண்ட் அடித்த ஞாபகம் வருகிறது” என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதை என்றும், தாங்கள் இருவரும் சேர்ந்து விருகம்பாக்கத்தில் ஒரு வீட்டிற்கும், அம்பத்தூரில் ஒரு பள்ளிக்கும் மட்டுமே பெயிண்ட் அடித்ததாகவும் அவர் உண்மையை உடைத்துள்ளார்.

   

இனிமேல் தங்களைப் போன்ற பழைய நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பேட்டிகளில் அனுதாபம் தேடுவதைச் சூரி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தனக்குச் சூரியின் உதவியோ சலுகையோ தேவையில்லை என்றும் இயக்குநர் வெற்றிவீரன் சவால் விடுத்துள்ளார். தற்போது தான் இயக்கியுள்ள “பூ காய் கனி” என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளமாகவும், விருதுகளைப் பெறும் படமாகவும் அமையும் என்றும், நடிகர் விஜய் மற்றும் அரசியல் பிரமுகரான ராஜ்மோகன் ஆகியோர் தனது மகளின் நடிப்பைப் பாராட்டி இந்த ஆண்டு நிச்சயம் விருது கிடைக்கும் என்று வாழ்த்தியுள்ளனர் என்றும் கூறித் தனது பேட்டியை அவர் நிறைவு செய்துள்ளார்.