Categories: வீடியோ

பழைய வீடியோவை வைத்து வீண் வதந்தி…! வழக்கம் போல் தங்கு தடையின்றி இயங்கும் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்…! நெட்டிசன்களுக்கு வடக்கு ரயில்வே கொடுத்த தெளிவான விளக்கம்…!!

Spread the love

சமூக வலைத்தளங்களில் ரயில் ஒன்று நிலையத்திற்குள் நுழைப்போது சிலர் அதன் மீது சரமாரியாகக் கல்வீசித் தாக்கும் வீடியோ ஒன்று அதிவேகமாகப் பரவி வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் ‘காக்கராய் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் அதன் ஆதரவாளர்கள்தான் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகப் பலரும் பதிவிட்டு வந்தனர். இருப்பினும், இந்த வீடியோ எந்த நிலையத்தில், எப்போது எடுக்கப்பட்டது என்ற தெளிவான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள வடக்கு ரயில்வே நிர்வாகம், பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய் எனத் தெரிவிடைத்துள்ளது. வீடியோவில் தாக்குதலுக்குள்ளாகும் ரயில் ஹைட்ரஜன் ரயிலே அல்ல என்றும், அது பிஹார் மாதேபுரா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட WAG-12 என்ற சக்திவாய்ந்த மின்சாரச் சரக்கு ரயில் இன்ஜின் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அது பழைய வீடியோவாக இருக்கக்கூடும் என்றும், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தனது அட்டவணையின்படி எவ்வித தடையுமின்றி வழக்கம்போல் இயங்கி வருவதாகவும் கூறி ரயில்வே நிர்வாகம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

4 minutes ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

18 minutes ago

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

26 minutes ago

“ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் சுவாகா”…. தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து திமுக பிரமுகர் அதிரடி கைது…. சற்றுமுன் பரபரப்பு….!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…

31 minutes ago

திமுகவுடன் கூட்டணியா?….. அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்…. அலறும் தமிழக அரசியல் களம்…..!

மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…

41 minutes ago

ஓட்டுக்கு ரூட் போட்ட தவெக?…. “மக்களே என்கிட்ட சொல்லிட்டாங்க”…. மதுராந்தகத்தில் அதிர்ச்சி திருப்பம்… சி.பி.எம் சண்முகம் போட்ட குண்டு….!

மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிகளவில் பணம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்களே தன்னிடம் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

51 minutes ago