பரந்தூர் பசுமைக்கள பன்னாட்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்திட்டத்தை நிறுத்துமாறு தமிழக அரசு எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தொடர்வதையும், இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு ஏப்ரல் 2025-இல் மத்திய அரசு ‘கொள்கை அளவிலான’ ஒப்புதலை வழங்கியதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
டிட்கோ சமர்ப்பித்த திட்ட அறிக்கையின்படி, முதற்கட்டப் பணிகளுக்காக ரூ. 10,500 கோடி மதிப்பீட்டில் திட்டச் செலவு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2008-ஆம் ஆண்டின் பசுமைக்கள விமான நிலையக் கொள்கையின்படி நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் மற்றும் நிதி திரட்டுதல் ஆகிய முழுப் பொறுப்புகளும் மாநில அரசு மற்றும் திட்ட உருவாக்குநரையே சாரும். எனவே, நிலக் கையகப்படுத்துதல் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகள் கிடைக்கும் கால அவகாசத்தைப் பொறுத்தே திட்டத்தின் இறுதி நிறைவுத் தேதி அமையும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அரசியல் களத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், இத்திட்டம் தொடர்பான தனது அதிகாரப்பூர்வ முடிவை அரசு இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதனால் பரந்தூர் பகுதியில் நில முதலீடு செய்தவர்கள் மத்தியில் குழப்பமும், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்ற நம்பிக்கையும் நிலவி வந்தது. ஆனால் மத்திய அரசின் இந்த தற்போதைய விளக்கமானது, மாநில அரசு இத்திட்டத்தை கைவிடும் எண்ணத்தில் இல்லை என்பதையும், முதற்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும் காட்டுகிறது.
மேலும், சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி விமான நிலையங்களின் தற்போதைய நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கப் பணிகள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார். அதன்படி சென்னையில் ரூ. 2,467 கோடி செலவிலான இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணி 81% நிறைவடைந்துள்ளது. திருச்சியில் ரூ. 80.17 கோடி செலவில் புதிய ஏடிசி கோபுரப் பணிகளும், கோவையில் புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எல்லைச் சுவர் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பூமிராஜா (39). இவருக்குச் செல்வராணி (35) என்ற மனைவியும் இரு…
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…
மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…