ஏர்சியா விமானத்தில் பயணம் செய்த சக பயணிகளின் பைகளில் தூக்கத்திலிருக்கும்போது திருட முயன்ற சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பாங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், 51 வயதுடைய நபர் ஒருவர் சக பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது, விமானத்தின் மேல் பகுதியில் உள்ள லக்கேஜ் பெட்டிகளில் இருந்த பைகளைத் திறந்து சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதோ ஒன்று தேடுவது பதிவாகியுள்ளது. பயணிகள் யாரும் விழித்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DefiwHMD_qT/?utm_source=ig_web_button_share_sheet
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, பாங்காக்கில் உள்ள டான் முவாங் விமான நிலையத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். விமானப் பயணங்களின்போது விலைமதிப்பபற்ற பொருட்கள் மற்றும் பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது.
