சண்டை போடவே பயமா?.. உங்களுக்காக ரூ 2,600 கொடுத்தா போதும்… நேரில் இறங்கி அடித்துத் துவைக்கும் சீன நபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 28, 2026

Spread the love

சீனாவின் குவாங்சூ நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பிரச்சனைகளிலும் வாக்குவாதங்களிலும் வாதாடிக் கொடுக்கும் வித்தியாசமான சேவையைத் தொடங்கி இணையத்தில் வைரலாகியுள்ளார். மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பதிலாகப் பேசுவதற்காக இவரை நியமித்துக் கொள்கின்றனர். சம்பளம் தராத முதலாளிகள், பணத்தைத் திரும்பத் தராத நிறுவனங்கள் மற்றும் அழகுக்கலை அறுவை சிகிச்சை புகார்கள் போன்ற பல்வேறு விவகாரங்களில் வாடிக்கையாளர்கள் சார்பாக இவர் களமிறங்குகிறார்.

ஒரு பிரச்சனையை அல்லது புகாரை கையாள்வதற்கு இவர் 188 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,681) கட்டணமாக வசூலிக்கிறார். இச்சேவையில் வாதாடும் நேரத்திற்கு எந்தவொரு வரம்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி மோதல்களை எதிர்கொள்ளத் தயங்குபவர்களுக்கும், அநீதியைத் தட்டிக்க கேட்க விரும்பும் சாதாரண மக்களுக்கும் இந்தச் சேவை மிகவும் உதவியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

https://www.instagram.com/reel/DezCwCgMQ42/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்த வித்தியாசமான தொழிலை விளம்பரப்படுத்த இவர் வீதிகளில் வலம் வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது முறையான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட மனித அநீதிகளுக்கு எதிராகப் போராட இந்த மாற்று வழி ஒரு புதிய தீர்வாக மாறியுள்ளது.