ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மூன்று பெண்கள் தங்களது ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ராஞ்சி-டாடா நெடுஞ்சாலையில் தசாம்பால் அருகே ஒரு திகிலூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்களது கார் மீது அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ எஸ்யூவி கார் ஒன்று லேசாக மோதியுள்ளது. இதுகுறித்து பெண்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பெண்கள் அங்கிருந்து உடனடியாக கிளம்பினர். ஆனால், அந்த ஸ்கார்பியோ காரில் இருந்த நபர்கள் இவர்களை சும்மா விடாமல், பல கிலோமீட்டர் தூரத்திற்கு காரை விரட்டிச் சென்று வழிமறித்துள்ளனர். காரின் கதவுகளை பலவந்தமாக திறக்க முயன்ற அந்த கும்பல், முடியாத ஆத்திரத்தில் கற்களை வீசி காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளது. இந்த கல்வீச்சில் ஓட்டுநர் ரன்வீர் சிங்கிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலின் போது, காரின் உள்ளே இருந்த பெண்கள் கதவுகளை பூட்டிக்கொண்டு அலறியபடியே காவல்துறையின் அவசர உதவி எண்களான 100 மற்றும் 112-க்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு உதவி கோரினர். ஆனால், மதியம் 12:33 மணிக்கு அழைப்பு விடுத்தும், சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு 12:58 மணிக்கே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் கூடத் தொடங்கியதால், தாக்குதல் நடத்திய கும்பல் காரில் தப்பியோடிவிட்டது. இந்த ஒட்டுமொத்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காரில் இருந்த பெண்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, நெடுஞ்சாலைகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், அவசர காலங்களில் காவல்துறையின் தாமதமான நடவடிக்கை குறித்தும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…
குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…
கடந்த 2004-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் புகழ்பெற்ற 'ஸ்விப்ட் அப்சர்வேட்டர்' (Swift Observatory) செயற்கைக்கோள், தனது 22 ஆண்டுகால…
டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம்…
புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள…