ஏக்வடாரில் (Ecuador) நெஞ்சை உலுக்கும் வகையில் ஒரு சிறுமி தனது தாயின் கல்லறைக்குள் அமர்ந்து பொம்மைகளுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போர் அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அந்தச் சிறுமிக்குத் தன் தாய் உயிருடன் இல்லை என்பதும், அவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெரியாத மழலைப் பருவமாகும். தாயின் பிரிவை உணர முடியாத அந்தச் சிறுமி, அவரைத் தேடி கல்லறைத் தோட்டத்திற்கு வந்துள்ளார்.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், திறந்த நிலையில் இருந்த தாயின் கல்லறைப் பெட்டிக்குள் (Tomb) அந்தச் சிறுமி மிகவும் இயல்பாக அமர்ந்திருக்கிறார். தான் கொண்டு வந்த பொம்மைகளை அங்கே அடுக்கி வைத்து, தன் தாயுடன் விளையாடுவது போன்ற பாவனையில் மழலை மாறாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார். “அம்மா தூங்குகிறார்” என்று நினைத்துக் கொண்டு, அந்தச் சிறுமி காட்டும் அன்பு, அங்கிருந்தவர்களையும் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்தக் காணொளி ‘உண்மையான அன்பிற்கு மரணம் கிடையாது’ என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. தாயின் அரவணைப்பைத் தேடும் அந்தச் சிறுமியின் அறியாமையும், பாசமும் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. “உலகிலேயே மிகக் கொடுமையான காட்சி இதுதான்” எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பேரதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
