எப்போது, எப்படி பார்க்கலாம்?… வானில் நிகழும் மாயம்.. நாளை இரவை மிஸ் பண்ணிடாதீங்க… வெறும் கண்ணாலே சனி கிரகத்தைப் பார்க்கலாம்…!!

By Gayathri on ஐப்பசி 3, 2026

Spread the love

விண்வெளியில் ஒரு அபூர்வ நிகழ்வாக, சனி கிரகம் வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாகவும் பெரியதாகவும் காட்சியளிக்க உள்ளது. சூரியன், பூமி மற்றும் சனி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் போது இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. வானியலில் இதனை ‘சனி கிரகத்தின் எதிர் நிலை’ என்று குறிப்பிடுவார்கள். இந்த நேரத்தில், சூரியனுக்கும் சனிக்கும் இடையில் பூமி சரியாக அமைவதால், சூரிய ஒளி முழுமையாக சனியின் மீது பட்டு அது இரவு முழுவதும் ஒளிரும். சுமார் 378 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே இத்தகைய அரிய நிகழ்வு நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது சனி கிரகம் பூமியில் இருந்து சுமார் 126 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். மாலை நேரத்தில் சூரியன் மறையும் அதே வேளையில், கிழக்கு வானில் சனி கிரகம் உதிக்கத் தொடங்கும். பின்னர் இரவு முழுவதும் விடிய விடியத் தெளிவாகத் தெரிந்து, மறுநாள் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு மேற்கு திசையில் மறையும். இது மாலை சுமார் 5.30 மணியளவில் துல்லியமாகத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்த விண்வெளி அதிசயத்தை நாம் எவ்வித உபகரணங்களும் இன்றி வெறும் கண்ணாலேயே பார்த்து ரசிக்க முடியும். வானில் ஒரு பிரகாசமான மஞ்சள் நிறப் புள்ளியாக இது நமக்குத் தெளிவாகக் காட்சியளிக்கும். நகரத்தின் அதிகப்படியான மின்விளக்கு வெளிச்சம் இல்லாத, இருட்டான மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மொட்டை மாடி அல்லது மைதானம் இருந்து பார்த்தால் இதனை மிகத் துல்லியமாகக் காண முடியும். மேலும், உங்களிடம் சாதாரண பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி இருந்தால், சனியைச் சுற்றியுள்ள அதன் புகழ்பெற்ற அழகிய வளையங்களையும் எளிதாகப் பார்த்து ரசிக்கலாம்.