“பிக்பாஸ் தொடங்கப்பட்ட முதல் நாளே வெளியேற்றப்பட்ட பிரபல போட்டியாளர்…” அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 6, 2026

Spread the love

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 10வது சீசன் தொடங்கப்பட்ட முதல் நாளே, போட்டியாளராகப் பங்கேற்ற பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல பிரித்விநாத், ஜாவித் மற்றும் பிரசாந்த் ஆகிய மூவரிடையே இணையதளம் வழியாக நடத்தப்பட்ட ரசிகர்கள் வாக்கெடுப்பில், பிரசாந்தை விட பிரித்விநாத் மற்றும் ஜாவித் ஆகிய இருவருக்கும் அதிக வாக்குகள் கிடைத்தன. இதனால் முதல் நாளே பிரசாந்த் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

   

கடந்த சீசனில் முதல் நாளே வெளியேற்றப்பட்ட நடிகை சச்சனா ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தது போல, பிரசாந்தும் ஓரிரு நாட்களில் மீண்டும் போட்டியாளராகத் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது சீசனாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, ரசிகர்களைக் கவரப் புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது.