சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மிரட்டுகிறார். இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ரிலீஸ் ஆகிறது.

நேற்று வேட்டையன் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்ற என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த மனு விசாரணைக்கு வருகிறது. வருகிற பத்தாம் தேதி வேட்டை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது படக்குழு மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
