“புலி” திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற ₹15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, வருமான வரித்துறை அவருக்கு ₹1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நேற்று இரவு வெளியான தகவல்களின்படி, இந்த வழக்கு விசாரணையின் போது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், வருமான வரித்துறையால் காலதாமதமாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர். ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த வருமான வரித்துறை, அபராதம் விதித்ததில் எந்தத் தவறும் இல்லை என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வருமான வரித்துறையின் பதில் குறித்து நடிகர் விஜய் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
