திக்… திக்… திக்… விபத்தை ஏற்படுத்திய போதை இளைஞர்கள்?… பூங்காவிற்குச் சென்ற தாய்-மகள் மீது ஏறிச் சென்ற கார்… ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 27, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஜாட் பவன் அருகே அமைந்திருக்கும் தேவிலால் பூங்காவிற்குத் தாயும் மகளும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் மிக வேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைகுலைந்து காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட தாய் மீது ஏறிச் சென்று பெரும் விபத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கொடூர விபத்தில் தாயும் மகளும் பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட உடனடியாக அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகப் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். காரில் பயணித்த இரு இளைஞர்களையும் அக்கம் பக்கத்தினர் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   

https://twitter.com/AbhishekJalan26/status/2114914993816707419/video/1

   

காரை ஓட்டி வந்தவர்கள் மது அருந்தியிருந்தார்களா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது; விசாரணைக்குப் பிறகே இது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சாலையில் செல்லும் பாதசாரிகளின் உயிரும் மிகவும் மதிப்புமிக்கது என்பதால், கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.