“கணவனை கொன்று சிமெண்ட் ஊற்றி டிரம்மில் அடைத்த கொடூரம்…” தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடையா…? நாடு முழுவதையும் உலுக்கிய மீரட் வழக்கில் திடீர் திருப்பம்…!!

By Devi Ramu on ஐப்பசி 28, 2026

Spread the love

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மீரட் ‘புளூ டிரம்’ கொடூரக் கொலை வழக்கில் குற்றவாளிகளான முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவளது கள்ளக்காதலன் சாஹில் சுக்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் பிரஹம்பூரி பகுதியைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் என்பவரைக் கொடூரமான முறையில் கொலை செய்து, அவரது உடலை நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் வைத்துச் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் ஊற்றி மறைத்த வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவருக்கும் மீரட் விசாரணை நீதிமன்றம் கடந்த அக்டோபர் 14 அன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

   

இந்தத் தூக்குத் தண்டனையையும் குற்றவாளி என்ற தீர்ப்பையும் எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூட்டாக மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள் சலீல் குமார் ராய் மற்றும் பதம் நாராயண் மிஸ்ரா அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த அதிர்ச்சி வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தற்போது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.