தன் சகோதரி மாதவிடாய் காலங்களில் அனுபவித்த வலிகளையும், சுகாதாரமற்ற சூழலால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளையும் கண்ட கிரிதி ஆச்சார்ஜி, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தேடினார். அந்தத் தேடலின் விளைவாக, தனது கைநிறைய ஊதியம் தந்த வேலையைத் துறந்து, நண்பர்களுடன் இணைந்து ‘ஹெல்த்ஃபேப்’ (Healthfab) எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். பெண்களின் மாதவிடாய் கால அசௌகரியங்களைப் போக்க ‘கோபேட்ஃப்ரீ’ (GoPadFree) எனப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பீரியட் பேண்டிகளை (Period Panty) இவர் வடிவமைத்தார்.
Every month, Kiriti Acharjee watched his sister struggle through her periods. Long hours without a clean washroom left her with discomfort, rashes, and quiet exhaustion.
Determined to change this, he quit his job and, along with friends, designed the GoPadFree Period Panty —… pic.twitter.com/wtFRsiYwxB
— The Better India (@thebetterindia) January 18, 2026
மென்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு, தற்போது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமான பெண்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சகோதரனின் பாசமும் அக்கறையும், இன்று பல லட்சம் பெண்களின் மாதவிடாய் காலச் சுமையைக் குறைக்கும் ஒரு பெரும் இயக்கமாக மாறியுள்ளது.
