தாயின் காலில் விழுந்து கெஞ்சி…! “கல்யாணம் பண்ணி வச்சா அடிச்சே கொன்னுடுவோம்….” 3 ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றிய காதலன்… பகீர் சம்பவம்..!!

By Devi Ramu on புரட்டாதி 11, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சண்முகப்பிரியாவும் சுரேஷ்குமார் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். காதலன் வாக்குறுதி அளித்ததை நம்பி சண்முகப்பிரியா அவருடன் பல இடங்களுக்குச் சென்று தனிமையிலும் இருந்துள்ளார்.

பெண்ணின் தாய் இவர்களது காதலைப் பற்றி தெரிந்த போது, தாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், பெண்ணின் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காதலன் சுரேஷ்குமார், “உங்க மகளை நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்” என வாக்குக் கொடுத்து குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியுள்ளார்.

   

ஆனால், தற்போது சண்முகப்பிரியாவின் சாதியைக் காரணம் காட்டித் திருமணம் செய்ய சுரேஷ்குமார் மறுத்துவிட்டு ஓடி ஒளிந்துள்ளார். இது குறித்துக் கேட்கச் சென்ற பெண்ணின் தாயாரிடம், “உங்க சாதிக்கும் எங்க சாதிக்கும் ஒத்து வராது, மீறி கல்யாணம் பண்ணி வச்சா அடிச்சே கொன்னுடுவோம்” என சுரேஷ்குமாரின் வீட்டார் கொடூர கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

   

3 ஆண்டுகள் கூடவே இருந்து வாழ்க்கையைச் சீரழித்துவிட்டுக் காதலன் ஏமாற்றியதால் அதிர்ச்சியடைந்த சண்முகப்பிரியா, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து புகாரளித்துள்ளார். காதலனைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் சாதியைச் சொல்லி ஏமாற்றிய அவர் மீது முதலமைச்சர் மற்றும் காவல் துறை உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.