திக் திக் நிமிடங்கள்… 640 அடி ஆழத்தில் 39 மணி நேர போராட்டம்… ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் ஷாக்கிங் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 18, 2026

Spread the love

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் உள்ள பண்ணை ஒன்றில், பழுதுபார்க்கும் பணியின் போது 1,050 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்தான். சிறுவன் சுமார் 640 அடி ஆழத்தில் சிக்கியிருந்த நிலையில், அவனைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினர்.

சிறுவனைப் பத்திரமாக மீட்கும் நோக்கில், மீட்புப் படையினர் தொடர்ந்து 39 மணி நேரமாகத் தீவிரப் போராட்டத்தை மேற்கொண்டனர். தொடர் முயற்சியின் பலனாக அந்தச் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வெற்றிகரமாக வெளியே மீட்கப்பட்டான்.

   

இருப்பினும், மீட்கப்பட்ட சிறுவனை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.