திக்… திக் நிமிடங்கள்… ஓய்வூதியப் பணத்துக்காக மூதாட்டியைத்… தரையில் தள்ளித் தாக்கிய சிறுவன்… மகாராஷ்டிராவில் நெஞ்சை நடுங்கும் கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 27, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், முதியவர் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ஓய்வூதியப் பணமான ரூ4,000-ஐ வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை, அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் வழிமறித்துள்ளான். அவரிடமிருந்த பணப் பையைப் பிடுங்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அந்த மூதாட்டி இரக்கமின்றி தரையில் தள்ளிவிடப்பட்டுள்ளார்.

திடீரென நடந்த இந்தத் தாக்குதலில் மூதாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். முதியவர் தரையில் விழுந்ததைப் பற்றியும் பொருட்படுத்தாமல், அந்தச் சிறுவன் மூதாட்டியிடமிருந்த பணப் பையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   

https://twitter.com/nextminutenews7/status/2114654138353021355/video/1

   

இந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய சிறுவனைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், விரைவில் அவனைக் கைது செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.