வைரலாகும் வீடியோவில் ஒரு சிறுவன் தண்ணீர் நிறைந்த வயலில் மிக லாவகமாகப் பாம்பைப் பிடிப்பது பதிவாகியுள்ளது. பாம்பின் தலைப்பகுதியைப் பிடித்து, அது கடிக்க வரும்போது ஒரு அனுபவம் வாய்ந்த பாம்பு பிடிப்பவரைப் போலவே அவன் கையாள்வது பலரையும் திகைக்க வைத்துள்ளது. இது போன்ற செயல்கள் துணிச்சலாகத் தெரிந்தாலும், மிக ஆபத்தானவை என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு சிறிய தவறு கூட உயிருக்கே ஆபத்தாக முடியலாம். சில வீடியோக்களில் பெரியவர்கள் அருகில் இருந்தும் குழந்தையைத் தடுக்காமல் படம்பிடிப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
असली खतरों का खिलाड़ी !
छोटे उस्ताद की बड़े कारनामा.शहर वाले छिपकलि से डरते हैं यहां छोटे महाराज सांप से खेल रहा है.. pic.twitter.com/XtYJk4tlyf
— Khadiza (@Khadiza_kbc) February 7, 2026
இணையதளங்களில் சிலர் குழந்தையின் தைரியத்தைப் பாராட்டினாலும், பெரும்பாலானோர் “இது தைரியமல்ல, பொறுப்பற்ற செயல்” என்றும், இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளை ஊக்குவிக்கக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் .
