ஒடிசா மாநிலம் குர்தா-போலங்கிர் ரயில் பாதை அருகே இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ எடுப்பதற்காக சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இதேபோன்று ரயிலின் கீழ் ஆபத்தான முறையில் சாகசம் செய்து எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன. இதைக் கண்ட காவல்துறையினர், அந்தச் சிறுவனின் குடும்பத்தினரை நேரில் அழைத்து கடுமையான எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/otvnews/status/2108829551128424642/video/1
தற்போதைய சமூக வலைத்தள மோகத்தால் இளைஞர்களும் சிறுவர்களும் இதுபோன்று தங்களின் உயிரை பணயம் வைத்து வீடியோக்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விபரீத செயல்களைத் தவிர்க்க பெற்றோரும் காவல்துறையினரும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
