“நான் வண்டி ஓட்ட பழகி 5 நாட்கள் தான் ஆச்சு…” லாரி சக்கரத்தில் சிக்கிய பைக்… நொடியில் உயிர் தப்பிய வாலிபர்… பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

பெங்களூரு வர்தூர் அருகே உள்ள குஞ்சுர் பால்யா CDP சாலையில், லாரிகள் மற்றும் வாட்டர் டேங்கர்களின் அராஜகத்தால் மீண்டும் ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது. சோபா நியோபோலிஸ் குடியிருப்புப் பகுதிக்குச் சற்றுத் தொலைவில், அதிவேகமாக வந்த வாட்டர் டேங்கர் லாரி ஒன்று, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் லாரி அடியில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக வாலிபர் உயிர் தப்பினார்.

விபத்தை ஏற்படுத்திய வாட்டர் டேங்கர் லாரியில் எவ்விதப் பதிவு எண் பலகையும் இல்லை. பிடிபட்ட ஓட்டுநரிடம் கிராம மக்கள் நடத்திய விசாரணையில், அவர் வாகனம் ஓட்டப் பழகி வெறும் 5 நாட்களே ஆகிறது என்றும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

முறையான அனுபவமும் ஓட்டுநர் உரிமமும் இல்லாத நபர்களைக் கொண்டு, எண் பலகை கூட இல்லாத கனரக வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள மோசமான சாலை அமைப்பும் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகப் பொதுமக்கள் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.