இலங்கை யாழ்ப்பாணத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது, மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்தின் கோரமான காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகப் பயணமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக நொறுங்கியதுடன், வேனில் இருந்தவர்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாகச் சென்றதால் நேர்ந்த இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
