சன் தொலைக்காட்சியில் திருமகள், அருவி, மருமகள் என பல சீரியல்கள் நடித்த பிரபலம் அடைந்தவர்தான் சீரியல நடிகை ஜீவிதா. அதிலும் குறிப்பாக மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாக சின்ன திரையில் அறிமுகம் ஆகியினார். அதன் பிறகு சீரியல்களில் சின்ன சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

#image_title
இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான அதன் பிறகு சில சீரியல்களில் வில்லியாகவே நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் தேவதை, பாசமலர், நிலா என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஜீ தமிழ் எங்க வீட்டுப் பெண் என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

#image_title
அதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மருமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அவபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இவருடைய கார் விபத்தில் சிக்கியுள்ளது.

#image_title
அதாவது ஒரு திருமண மண்டபத்திற்கு வெளியே கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வெளியே இவருடைய கார் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு பெரிய மரம் ஒன்று காரில் விழுந்துள்ளது. அதில் காரின் முன் பகுதி மற்றும் சைடு பகுதியில் இருக்கும் கண்ணாடி பாகங்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது. இது குறித்து ஜீவிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விபத்தில் காருக்கு மட்டும்தான் பாதிப்பு. நல்ல வேளையாக வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. நான் உயிர் பிழைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
