“திக் திக் நிமிடம்!… பேருந்தில் ஏற முயன்ற 70 வயது மூதாட்டி… அடுத்த நிமிடமே காத்திருந்த அதிர்ச்சி… கடையத்தை உலுக்கிய பெரும் சோகம் சம்பவம்…!!!1

Spread the love

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்பம்மாள், இன்று காலை நெல்லைக்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்தில் அவர் ஏற முயன்றபோது, வயது மூப்பு காரணமாகப் படிக்கட்டில் ஏறுவதற்குச் சிரமப்பட்டுள்ளார். அவர் முழுமையாக ஏறுவதற்கு முன்னரே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த எதிர்பாராத நிகழ்வால் நிலைதடுமாறிய சுப்பம்மாள், பேருந்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கடையம் காவல்துறையினர் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன. அந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய கடையம் போலீசார், ஓட்டுநரின் கவனக்குறைவு குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களிடையே இந்தப் படக்காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Muthu Mani

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

7 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

7 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

8 மணத்தியாலங்கள் ago