வாரணாசி-லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள லீலாபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாகராசுந்தர்பூர் சந்தையில் வசிக்கும் யசோதா தேவி (70), தனது மகள் ஆஷா தேவியை (48). கணவரைப் பிரிந்த இவர் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். ஆஷாவின் மகன் அங்கித் பட்வாவிற்கு திருமணமாகி ஆறு மாத மகன் உள்ளார்கள். வீட்டின் வெளிப்புற அறையில் அங்கித் ஒரு பொதுக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆஷா, அங்கித், ரியா மற்றும் அவர்களது மகன் முதல் மாடியில் தூங்கச் சென்றனர்.
யசோதா தேவி கீழே தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மறுநாள் பால் வியாபாரி காலை 7 மணியளவில் வந்துள்ளார். அவர் பார்த்தபோது, கடையின் ஷட்டர் ஓரளவு திறந்திருந்துள்ளது. ஆனால் யாரும் இல்லையாம். அவர் கூப்பிட்டபோது, உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லையாம். இதனால் அவர் அங்கித்தின் பக்கத்து வீட்டு நண்பர் அசோக் ஜெய்ஸ்வாலுக்கு தகவல் கொடுத்தார். இதன் பின்னர், இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் மூன்று பெரும் இறந்து கிடப்பதை கண்டனர்.
குழந்தை தனது தாயைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளது . சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணையின் போது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் மரணத்திற்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
