ஒரு சீட் தகராறு… ஒரு உயிர் போச்சு!.. ஓடும் ரயிலில் வெடித்த மோதல்… பிடிபட்ட முன்னாள் IAS அதிகாரி… மெட்ரோவை உலுக்கிய கோரச் சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 12, 2026

Spread the love

டெல்லி மெட்ரோ ரயிலில் முதியவர்களுக்கான இருக்கையில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட வாய்மொழித் தகராறு, திடீரென பெரும் கைகலப்பாக மாறியது. இந்த மோதலின் போது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலில் 48 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொதுப் போக்குவரத்துப் பகுதியில் நிகழ்ந்த இந்த எதிர்பாராத வன்முறைச் சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த டெல்லி மெட்ரோ காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு நொய்டாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங் மற்றும் அவரது மகன் சித்தார்த் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவ்விருவரையும், நீதிபதி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.