அடபாவேமே…! நொடியில் பறிபோன உயிர்!… அரசு பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்… பதறவைக்கும் சாலை விபத்து…!!

By Gayathri on கார்த்திகை 19, 2026

Spread the love

நிர்மல் மாவட்டத்தின் பைன்சா பகுதியில், பசாராவிலிருந்து பைன்சா பேருந்து நிலையம் நோக்கிப் பயணித்த அரசுப் பேருந்து ஒன்று, ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 38 வயதான நாகேஷ் என்பவர் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவருடன் பயணித்த சையத் அமீர் என்பவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த நாகேஷின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.