பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா?… நடுரோட்டில் நடந்த 2 கி.மீ சேஸிங்… புதரில் சடலமாக வீசப்பட்ட பயங்கரம்… சிக்கிய முக்கிய ஆதாரம்?…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்று, தன் சொந்த காலில் நின்று குடும்பத்தை வழிநடத்த நினைத்த 27 வயது ஆசிரியை ராணி விஸ்வகர்மாவின் வாழ்க்கை நடுவழியில் கொடூரமாகப் பறிக்கப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்குகிறது. பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு நல்வழி காட்டிவிட்டு, உழைத்த சம்பளத்தை வாங்குவதற்காகச் சென்ற ஒரு பெண், அடுத்த நாளே காரில் இருந்து புதருக்குள் சடலமாக வீசப்படும் அவலம் இந்தச் சமூகத்தில் பெண்கள் மீதான பாதுகாப்பின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பட்டப்பகலில் துணிச்சலாக உடலை வீசிவிட்டுத் தப்பும் அளவுக்கு குற்றவாளிகளுக்குத் துணிச்சல் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி நம்மை உறைய வைக்கிறது.

பெண்களுக்குப் பாதுகாப்பான தேசம் என்ற முழக்கங்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், சம்பளம் வாங்கச் சென்ற ஒரு பெண் பிணமாக மட்டுமே வீடு திரும்ப முடிகிறது என்றால், இங்கு சட்டம் – ஒழுங்கும் நிர்வாகமும் யாருக்காக இயங்குகின்றன? துரத்திச் சென்ற மக்களின் கொந்தளிப்பு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் இத்தகைய கொடுமைகள் வெறும் செய்திகளாகக் கடந்து போகக் கூடாது. இதற்கு யார் பதில் சொல்வது என்ற வேதனைக் கேள்விக்கு, வெறுமனே அறிக்கைகள் தராமல் குற்றவாளிகளை விரைந்து கூண்டில் ஏற்றி உச்சபட்சத் தண்டனை பெற்றுத் தருவதே நீதிக்கான உண்மையான விடையாக இருக்க முடியும்.