திரைப்படத் தயாரிப்போ அல்லது கணினித் துறையோ சாராத, சீனாவைச் சேர்ந்த 29 வயதான முன்னாள் ரயில் ஓட்டுநர் லியு ஜியு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘ஸோம்பி ஸ்கேவெஞ்சர்’ என்ற 3.5 நிமிடக் குறும்படத்தை உருவாக்கி ஹாலிவுட்டின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். வெறும் 42,000 ரூபாய் (€3,000 யுவான்) செலவிலும், 10 நாட்களிலும் உருவாக்கப்பட்ட இக்குறும்படம், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற அனிமேஷன் படமான ‘வால்-இ’-யால் ஈர்க்கப்பட்டு ஒரு ரோபோவிற்கும் பொம்மைக்கும் இடையிலான காதல் கதையை அழகாகச் சித்தரிக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியான சில நாட்களிலேயே இக்குறும் படம் உலகளவில் 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
இயந்திரப் பொறியியல் படித்துவிட்டு, திருமணப் புகைப்படக் கலைஞராக மாறிய லியு, தனது பெற்றோரின் புதிய ஹோட்டலை விளம்பரப்படுத்த வீடியோ தயாரிக்க முயன்றபோதே AI கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுள்ளார். சிறந்த வீடியோக்களை உருவாக்க AI-க்கு நேரடி கட்டளைகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, கதையின் தர்க்கம், கதாபாத்திரத்தின் செயல்பாடு, உந்துதல் மற்றும் மனநிலை ஆகியவற்றை விரிவாக விளக்குவதே தனது எளிய சூத்திரம் என்று லியு கூறுகிறார். இவரின் இந்தத் தனித்துவமான அணுகுமுறையால் உருவான காட்சிகளைப் பார்த்த புகழ்பெற்ற ஹாலிவுட் AI திரைப்படப் படைப்பாளியான பி.ஜே. அசெட்டுரோ, “பல ஆண்டுகளில் நான் பார்த்த சிறந்த குறும்படங்களில் இதுவும் ஒன்று” எனப் பாராட்டி, லியுவுக்குப் பணி வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பை லியு பணிவுடன் மறுத்துவிட்டாலும், சீனாவில் இருந்துகொண்டே எதிர்கால ஹாலிவுட் திட்டங்களில் பணியாற்ற அவர் ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது சீனத் திரைப்பட நிறுவனம் ஒன்று இக்குறும்படத்தின் உரிமைகளை வாங்கியுள்ள நிலையிலும், இந்த மாபெரும் வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் லியு மிகவும் யதார்த்தமாக இருக்கிறார். “நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன், எனது அடுத்த திட்டத்திற்குத் தயாராகி வருகிறேன்” என்று பணிவுடன் கூறும் லியு, திறமைக்கும் தொழில்நுட்பத்திற்கும் எல்லைகள் இல்லை என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…