இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

By Gayathri on கார்த்திகை 13, 2026

Spread the love

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உளி, கத்தி மற்றும் கட்டைகள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து சுயநினைவை இழந்தார். இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர்கள் மயக்கமடைந்த நிலையிலிருந்த நிதினை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்து, அவரது வீட்டின் வாசலிலேயே வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிதின், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தாக்குதல் குறித்துத் தான் முறையாகப் புகார் அளித்த போதிலும், காவல்துறையினர் இதுவரை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றும், குற்றவாளிகளைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை காட்டும் இந்த மெத்தனப்போக்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.