உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை மாலை அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஹோட்டலின் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 24 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கு கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்தனர். பெண் எவ்வாறு கீழே விழுந்தார், சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில்தான் சம்பவத்தின் பின்னணி குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
