இதெல்லாம் தேவையா?… “படிக்க போன படிக்கிற வேலைய மட்டும் பாக்கணும்…” லிவின் ரிலேஷன்ஷிப்பால் நடந்த கொடூரம்… இந்திய மாணவி படுகொலை… உடலை கூட தர மறுக்கும் அரசு… கதறும் பெற்றோர்…!

By Visaka on ஆடி 27, 2026

Spread the love

கனடாவில் உயர்கல்வி பயின்று வந்த பஞ்சாபைச் சேர்ந்த 23 வயது இந்திய மாணவி தமன்பிரீத் கவுர், தன்னுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ரித்திஷ் குமார் என்பவரால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். எட்மண்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தமன்பிரீத் கவுர், கடந்த ஜூலை 9 அன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை 12 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கனடா காவல்துறையினர், பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் இது கொலை என்பதை உறுதி செய்து ரித்திஷ் குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் கல்வி பயிலச் சென்ற இளம் மாணவி தன் காதலனாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் இந்திய வம்சாவளியினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த தமன்பிரீத் கவுரின் உடலை அவரது சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு கொண்டு வருவதில் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், குடும்பத்தினரும் நண்பர்களும் ‘GoFundMe’ தளம் மூலமாக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.