காதல் கண்ணை மறைச்சிருச்சா…? உறவினரை தீர்த்து கட்டிய 15 வயது சிறுமி… காதலனுடன் சேர்ந்து வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on தை 26, 2026

Spread the love

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிவசுப்பிரமணியன் என்ற கேஸ் ஏஜென்சி ஊழியர், தனது வீட்டின் முன்பே இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில் துப்பு துலக்கிய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சிவசுப்பிரமணியனின் உறவினரான 15 வயது சிறுமி மற்றும் அவரது காதலன் ராதாகிருஷ்ணன் ஆகியோரே இந்தக் கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

தங்களது காதலுக்குத் தடையாக இருந்ததாலும், தன்னைத் தொடர்ந்து கண்டித்ததாலும் ஆத்திரமடைந்த அந்தச் சிறுமி, தனது காதலனுடன் சேர்ந்து சிவசுப்பிரமணியனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். பெங்களூருவில் பதுங்கியிருந்த ராதாகிருஷ்ணனைப் பிடித்த போலீசார், அவருக்கு உதவியாக இருந்த அவரது தம்பி மற்றும் நண்பர் என மொத்தம் நான்கு பேரைக் கைது செய்தனர். காதல் மோகத்தால் சொந்த உறவினரையே சிறுமி ஒருவரின் தூண்டுதலில் கொலை செய்த இந்தச் சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.