15 வயது சிறுமி கர்ப்பம்.. வீட்டில் வைத்து கருவை கலைக்க முயன்றபோது விபரீதம்… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

By Soundarya on தை 31, 2026

Spread the love
செங்கல்பட்டு தாலுகாவில் 15 வயது சிறுமி ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சியின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கர்ப்பமானதை கண்டறிந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதுகுறித்து தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கத் தவறியதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் சட்டப்பூர்வமான மருத்துவ உதவி கிடைக்காததால், வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன்றபோது சிறுமியின் உயிர் பிரிந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கர்ப்பமாக்கி தப்பியோடிய வாலிபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறிய தனியார் மருத்துவமனை மற்றும் தொடர்புடைய நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.