gaming

Gaming App வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… அசத்திய 13 வயதே ஆன பெங்களூர் மாணவன்…

By admin on ஐப்பசி 25, 2024

Spread the love

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது அனைவருக்கும் தேவையான அறிந்து கொள்ளக்கூடிய ஒரு விஷயம். பெரியவர்கள் எளிதாக இதை பயின்று விடலாம். ஆனால் சிறியவர்கள் எப்படி இதை கற்று கொள்ள முடியும். அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிறுவர்களுக்கு எப்போதும் விளையாட்டு முறையிலேயே அவர்கள் கற்பித்தால் தான் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். எல்லா குழந்தைகளும் விளையாடக்கூடிய ஒரு பருவத்தில் 13 வயதே ஆன பெங்களூரில் சேர்ந்த ஒரு மாணவன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை Gaming App மூலம் ஏற்படுத்துவதற்காக உருவாக்கி இருக்கிறார். அதைப்பற்றி இனி காண்போம்.

   

பெங்களூர் ராஜாஜி நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சூர்யா மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது இவர் உயிரை காப்பாற்றக்கூடிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த மொபைல் கேமிங் பயன்பாட்டை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். இது அவர் சிறுவயதில் இருக்கும் போது விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியபோது இந்த சாலை பாதுகாப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

   

அதன்படி Roadyz என்ற கேமிங் ஆப்பை குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை விளையாட்டு மூலமாகவே கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார் சூர்யா. ஐந்து வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை மையமாகக் கொண்டு இந்த ஆப் செயல்படும்.

 

அடுத்ததாக இந்த செயலி 2026 ஆம் ஆண்டிற்குள் பள்ளிகளுடன் இணைந்து இந்த கல்வி திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த செயலியை மாற்ற திட்டமிட்டு இருப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். மேலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளை இந்த Roadyz செயலி மூலம் அணுக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இந்த செயலை உருவாக்கியதை தாண்டி சிறுவயதிலேயே இவர் செய்த சாதனை தொழில் முனைவு திறன் அனைவரையும் ஆச்ர்யமடைய வைக்கிறது. ஒரே வார்த்தையில் இதைப் பற்றி கேட்கும் போது சூர்யா உலகம் மீது ஆக்கபூர்வமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் என்று கூறுகிறார். இவருக்கு பக்கபலமாக அவரது பெற்றோர்கள் இருக்கின்றனர். அனைத்து சிறுவர்களுக்கும் இவர் முன்மாதிரியாக இருக்கிறார்.