“விளையாட்டு மைதான கழிவறையில் நடந்த விஷயம்” கர்ப்பமாகி அபார்ஷன் ஆனது… பயிற்சியாளர் மீது 12-ம் வகுப்பு படிக்கும் ஹாக்கி வீராங்கனை பரபரப்பு புகார்…!!

By Soundarya on தை 14, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில், 12-ம் வகுப்பு படிக்கும் ஹாக்கி வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் மீதே பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனக்கு அறிமுகமான ஜூனியர் பயிற்சியாளர், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானத்தின் கழிவறையில் வைத்துத் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி காவல்துறையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஜனவரி 5-ம் தேதி  அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்நிலை மிக மோசமடைந்த சிறுமி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தலைமறைவாக உள்ள அந்தப் பயிற்சியாளரை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.