காலையிலேயே தமிழக அரசியலில் பரபரப்பு…. ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலாவின் புதிய அவதாரம்…. பிப்ரவரி 24-ல் அதிமுக கோட்டை அதிரப்போகுது….!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று சசிகலா ‘அம்மா அதிமுக’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையிலும், டிடிவி தினகரனின் அமமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாலும் சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கவும், டிடிவி தினகரனுக்கு அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடவும் சசிகலா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், தனது புதிய கட்சியின் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைத் திரட்டி, அதன் மூலம் அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுக்க சசிகலா கணக்குப் போடுகிறார். இதற்கிடையே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான திரைமறைவு வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் முழுச் செலவுகளையும் தானே ஏற்பதாகத் தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டு அரசியலில் தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கத் தயாராகி வருகிறார். இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.