ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் உருவான இறைவன் படத்தை அகமத் இயக்கியுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வருகிற 28-ஆம் தேதி இறைவன் படம் திரைக்கு வர இருக்கிறது. நேற்று சென்னையில் இறைவன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜெயம் ரவி இயக்குனர் அகமது, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி நடிகர் ஜெயம் ரவி குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். நான் இயக்குனர் மோகன்ராஜ் ஆபீசிலும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் ஷூட்டிங்கிலும் ஜெயம் ரவியை பார்த்திருக்கிறேன். நான் பார்த்த முதல் நடிகர் ஜெயம் ரவி தான். அந்தப் படத்தில் நான் ஜிம் பாய் ரோலில் நடித்திருந்தேன்.

எனது முதல் படத்திற்கு சம்பளம் 250 ரூபாய். இரண்டாவது படத்திற்கு சம்பளம் 400 ரூபாய். சினிமாவிற்கு நடிக்க வந்த காலகட்டத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவி தான் எனக் கூறினார். மேலும் ஜெயம் ரவியும், நானும் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டேன். அடுத்ததாக பேசிய ஜெயம் ரவி, நான் படம் இயக்க வேண்டும் என்று நினைத்த முதல் நடிகர் விஜய் சேதுபதி தான்.

உங்களை வைத்து தான் ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறேன். ஒரு நடிகனுக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் இருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றையுமே அவரே நடித்து எல்லா வேலைகளையும் செய்து விடுவார். உங்களை வைத்து படம் இயக்கினால் எனக்கு ஈசியாக பெயர் கிடைத்து விடும். உங்களை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறேன். எனக்காக சிறிது நாட்கள் நீங்கள் கால் சீட்டு ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என கூறினார்.

