CINEMA
இந்த season தீயா இருக்கும்… இதுல சிக்கப்போறது யாரா இருக்கும்…? பிரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்க…?
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வரவேற்பு பெற்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விட்டால் அத்தனை ஷோக்களும் ஓரம் கட்டப்பட்டு விடும். அந்த அளவுக்கு டிஆர்பியில் இந்த நிகழ்ச்சி தான் சக்கை போடு போடும். இதற்கு போட்டியாளர்கள் ஒரு காரணம் என்றாலும் உலக நாயகனின் சாமர்த்தியமான பேச்சு தான் முக்கிய காரணம். அந்த வகையில் இந்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதற்காகவே அவருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த சீசனுக்கான ப்ரோமோ சூட்டிங் முடிந்த நிலையில் எப்போது நிகழ்ச்சி தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள், இரண்டு அணிகள் என பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக கமலஹாசன் ப்ரோமோவில் தெரிவித்திருந்தார். தற்பொழுது இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தொடர்பான விவரங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு பிரித்விராஜ், நடிகர் அப்பாஸ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ஜோவிகா விஜயகுமார், குமரன் தங்கராஜன் , ராஜலக்ஷ்மி செந்தில் , பயில்வான் ரங்கநாதன், இந்திரஜா ஷங்கர், ஸ்ரீதேவி விஜயகுமார் போன்றோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து விஜய் டிவியும் அவ்வப்பொழுது பிக் பாஸ் ப்ரோமோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா என மூவரும் பேசிக்கொள்ளும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram