CINEMA
இது மகள்களை பெற்ற அப்பாக்களின் வலி.. மகளின் திருமணத்தில் கண்கலங்கி அழுத தலைவாசல் விஜய்(வீடியோ)..
குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் தலைவாசல் விஜய் . ‘காதல் கோட்டை’ படத்தில் இவர் நடனமாடிய ‘கவலைப்படாதே சகோதரா’ என்ற பாடல் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் ‘தலைவாசல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலமே இவருக்கு தலைவாசல் விஜய் என்ற பெயர் ஏற்பட்டது.
இவர் நடிப்பில் வெளியான பிளாக், யானை, லத்தி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிற மொழி நடிகர்களுக்கு இவர் பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.
நடிகர் தலைவாசல் விஜய்யின் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொழுது இவருக்கு ஜெயவீனா என்று ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. இவர் நேபாள நாட்டின் தலைநகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனாவிற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
பாபா அபராஜித் ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிரைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருமணத்தில் நடிகர் தலைவாசல் விஜய் மகளை நினைத்து கண் கலங்கிய தருணங்கள் ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பந்தத்தை அழகாக கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. இதோ அந்த எமோஷனல் வீடியோ…
View this post on Instagram